உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Friday, February 6, 2009

பேர்லினில் 15 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்ட வரலாறு காணாத பேரிழுச்சி

நேற்றுப் புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் யேர்மனி நாட்டுக்கான நோர்வே தூதரகத்தின் முன்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நோர்வே தூதர சாலையிலிருந்து கண்டனப் பேரணிக்கு தயாராகும் மக்கள்
நேற்றுப் புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் யேர்மனி நாட்டுக்கான நோர்வே தூதரகத்தின் முன்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், போரை நிறுத்தக் கோரி நோர்வே தூதரகத்தில் மனுக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்களின் படிகள் ஸ்கன்ரிநேவிய நாடுகளுக்கும் நோர்வே ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
நோர்வே தூதரகத்தில் ஆரப்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி தூதரகங்கள் அமைந்துள்ள பிரதான சாலை ஊடாக கோசங்களை எழுப்பியவாறும் சொற்கட்டுகள் மற்றும் பதாதைகளைத் தாங்கிவாறும் நகர்ந்து சென்றது


சிறீலங்கா அரசே இன அழிப்பை நிறுத்துசிறீலங்கா அரசே போரை உடன் நிறுத்துஊடகங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துஎங்கள் நாடு தமிழீழம்இந்திய அரசே உதவுவதை நிறுத்துஇந்திய அரசசே போரை நிறுத்த உதவு

முன்னகர்ந்து சென்ற பேரணி, இந்தியத் தூதரகம் முன்னால் நிறுத்தப்பட்டு இந்திய அரசு போரை நிறுத்தக் கோரி அழுத்தம் கொடுக்கப் கோரியும், சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தக் கோரியும், போரை இந்தியாவே தலைமையேற்று நடத்துகின்றது என்பதைக் கண்டித்தும் 30 நிமிடத்திற்கு மேலாக கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மனுக் கையளிக்கப்பட்டதும் பேரணி தூதரகச் சாலை ஊடாக மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் பேர்லின் மத்திய நகரான சொனி சென்றர் ( கனககனகன) பிரதான சாலை ஊடாக சென்ற பேரணி பிரண்டன்பேர்க் கோபுரம் முன்னால் நிறுத்தப்பட்டது




பின் அங்கிருந்து யேர்மனி நாட்டின் அரச அதிபர் செயலகத்தின் முன்னாலும் யேர்மன் பாராளுமன்றத்திற்கு அருகாமையிலும் கண்டனப் பேரணி சென்றடைந்தது ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமநேரத்தில் யேர்மனி அரச அதிபருக்கான மனு கையளிக்கப்பட்டதும் கண்டனப் பேரணி நிறைவடைந்தது.


யேர்மனியில் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் 600 கிலோ மீற்றர் தொடக்கம் 950 கிலோ மீற்றர் வரைக்கும் பேருந்துகளில் பயணித்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டு பேரணிக்கு வலுவூட்டியுள்ளனர்


இப்பேரணி தொடர்பான யேர்மனி மற்றும் பிறநாட்டு ஊடகங்களான தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், சஞ்சிகைள், இணையங்கள் என்பவற்றில் வெளிவந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது



0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP