உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Wednesday, February 11, 2009

வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது



முத்துக்குமரனின் சாம்பல் சென்னை கொளத்தூரில் இருந்து கொழுவை நல்லூருக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்ட கொழுவை நல்லூரில் அவரது உயிர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது.
இந்த சாம்பல் ஊர்வலம் இன்று காலை கொளத்தூரில் தொடங்கியது. இதில் ம.தி.முக. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்பட இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர், வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள், மீனவர்கள், வணிகர்கள், தமிழுணர்வாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனின் சாம்பல் ஊர்வலம் கொளத்தூரில் இருந்து புறப்பட்டு, ஓட்டேரி, புரசைவாக்கம், அமைந்தகரை, வடபழனி, தி.நகர், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை, விருத்தாசலம், திட்டக்குடி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, (இரவு தங்குதல்). 12 ஆம் திகதி கீரனூரில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, திருமயம், சிவகங்கை, மேலூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி சென்றடைகிறது.
பின்னர் 13 ந் திகதி காலை வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, இராதாபுரம், சாத்தான்குளம், உடன்குடி, பரமன்குறிச்சி, திருச்செந்தூர், ஆறுமுகனேரி, வழியாக ஆத்தூர் சென்றடைகிறது. வீரத்திருமகன் முத்துக்குமரனின் சாம்பல் 13 ந் திகதி கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கடலில் கரைக்கப்படுகிறது.
அன்று மாலையில் கொழுவை நல்லூரில் வீரத்திருமகன் முத்துக்குமரனுக்கு நினைவுத்தூன் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. இதில் வணிகர்கள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP