உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Tuesday, February 3, 2009

அமெரிக்க ராணுவம் ஒரு ஆண்டுக்குள் நாடு திரும்புமஒபாமா அறிவிப்பு

ஈராக்கில் தங்கி இருந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் பெரும்பகுதியினர் ஒரு ஆண்டு காலத்துக்குள் நாடு திரும்புவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார்.

தேர்தல் கால வாக்குறுதி

ஈராக் நாட்டின் மீது கடந்த 2003-ம் ஆண்டு தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. அப்போது முதல் அந்த நாட்டில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. இப்போது அந்த நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள். அங்கு இருந்து ராணுவத்தை திரும்பப்பெற வேண்டும் என்று அமெரிக்கர்கள் கோரி வந்தனர். இதற்கு முந்தைய ஜனாதிபதி புஷ் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போதே ஒபாமா, மாதம் ஒன்று அல்லது இரண்டு பிரிகேட் (படைப்பிரிவு) என்ற அடிப்படையில் 16 மாதத்துக்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவேன் என்று உறுதி மொழி கொடுத்தார்.

ஒரு ஆண்டுக்குள்

இந்த நிலையில் என்.பி.சி. டி.வி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஒபாமா கூறுகையில், ஒரு ஆண்டு காலத்துக்குள் பெரும் அளவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நாடு திரும்புவார்கள். நான் அமெரிக்க ராணுவத் தளபதிகளுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் ஈராக்கில் களப்பணியில் ஈடுபட்டு உள்ள தளபதிகளும் கலந்து கொண்டனர். ஈராக்கில் சமீபத்தில் மாநில சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்து உள்ளது. அப்போது குறிப்பிடத்தக்க அளவில் வன்முறை எதுவும் நிகழவில்லை. எனவே ஈராக்கியர்கள் மீது மேலும் அதிகமான பொறுப்புகளை சுமத்தக்கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

இவ்வாறு ஒபாமா கூறினார்.

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க

ஆப்கானிஸ்தானில் இப்போது 36 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 60 ஆயிரத்தை விட அதிகப்படுத்தப்படுத்தலாமா என்று ஒபாமா நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

ஈராக்போரில் பலியான அமெரிக்க ராணுவவீரர்களின் எண்ணிக்கை 4236 ஆகும். ஆப்கானிஸ்தான் போரில் 644 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பலியான அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஒபாமா கையெழுத்திட்ட கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP